×

நன்மைகளை தந்தருளும் கீழப்பாவூர் நரசிம்மர்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

மூலவர் நரசிம்மர் விசித்திர வடிவம் உடையவர். 16 திருக்கரங்களுடன் உக்ர வடிவத்துடன் இரணியனை சம்ஹாரம் செய்த நிலையில் சேவை சாதிக்கிறார்.நரசிம்மப்பெருமாள் மேற்கு நோக்கி வீற்றிருக்கிறார். இரண்யனை மடியில் கிடத்தி, இரண்டு கரங்களால் தாங்கிப் பிடிக்க, இரண்டு கரங்களால் குடலை உருவ, இதர கரங்களில் சங்கு சக்கரதாரியாய் ஆயுதங்களுடனும், வாழ்த்தும் கரங்களுடனும் ஹிரண்ய வதத்தோற்றம் கொண்டுள்ளார் நரசிம்ம பெருமாள்.

இந்தியாவில், 16 கரங்களுடன் நரசிம்மர் காட்சி தரும் மூன்று தலங்களுள் இதுவும் ஒன்றாகும். மற்ற இரு கோயில்களில் ஒன்று இராஜஸ்தானிலும், மற்றொன்று தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள சிங்கிரிகுடி அல்லது சிங்கர்குடி என்னும் ஊரிலும் அமைந்துள்ளன.கீழப்பாவூர் நரசிம்மரை வழிபட்டால் அறிந்தும் அறியாமலும் சென்ற பிறவி, மற்றும் இந்தப் பிறவியில் செய்த பாவங்கள் நீங்கி, முக்தி கிடைக்கும். மேலும், இத்தலத்து நரசிம்மரை சேவித்தால், அஹோபிலம் நரசிம்மர் ஸ்வாமியையும் சேவித்த பலனையும் பெறலாம்.

இத்திருத்தலத்தின் மூலவர், நரசிம்மப் பெருமாள், தாயார்; அலர்மேல் மங்கை, தலத் தீர்த்தம்; நரசிம்ம தீர்த்தம்இவ்வாலயத்தின் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு வரை மாலையும் இரவும் அல்லாத நடுவேளை நேரத்தில், நரசிம்மரின் உக்ரம் காரணமாக சிங்கம் கர்ஜிக்கும் சத்தம் கேட்டதாக இப்பகுதி மக்களிடத்தில் செவிவழிச் செய்தி உலாவுகிறது. அதன் காரணமாக பால், இளநீர் அபிஷேகம் செய்து வழிபடத்தொடங்கியதும் சத்தம் நின்றுவிட்டதாம். இவருடைய சந்நதிக்கு முன்பாக, மாபெரும் தெப்பக்குளம் ஒன்றினை அமைத்தும், நரசிம்மரின் உக்ரத்தை தணித்துள்ளனர்.

கல்யாணத்தடை, வழக்குகள், கடுமையான நோய் ஆகியவற்றுக்கு இங்கு பரிகாரங்களை செய்துகொள்வது சிறப்பானதாகும். கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 7.30 – 10.30 மற்றும் மாலை 5 – 7.30 வரை, கோயில் தொடர்புக்கு: 9442330643

தென்காசியில் இருந்து கிழக்கில் பாவூர்சத்திரம் – சுரண்டை என்ற ஊருக்குச் செல்லும் வழியில் 2 கிமீ தொலைவில் இக்கோயில் அமைந்துள்ள
கீழப்பாவூர் உள்ளது.

தொகுப்பு: நாகலட்சுமி

The post நன்மைகளை தந்தருளும் கீழப்பாவூர் நரசிம்மர் appeared first on Dinakaran.

Tags : Dapavur Narasimmer ,Narasimmer ,Ranayanana Samharam ,Dadapavur Narasimmer ,
× RELATED கலைஞரின் தலவிருட்சம் நடும்...